ஏடிஎம்-ல் பணம் நிரப்ப சென்ற வாகனம்.. மீதி பணத்தோடு ஜூட் விட்ட ஓட்டுநர்

Update: 2022-09-19 09:28 GMT

ஆந்திர மாநிலம் கடப்பாவில், ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக சென்றபோது, 56 லட்சம் ரூபாய் பணத்துடன் வாகனத்தை கடத்திச் சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கடப்பா நகரில் 71 லட்சம் ரூபாய் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

3 ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்பட்ட பின், அந்த வாகனத்தில் 56 லட்சம் ரூபாய் பணம் மீதம் இருந்தது.

இந்த நிலையில், வாகன ஓட்டுனர் மகபூப் பாஷா என்பவர், திடீரென மீதி பணம் 56 லட்சம் ரூபாய் உடன் வாகனத்துடன் தப்பிச் சென்று விட்டார்.

இது தொடர்பான புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மகபூப் பாஷா ஏடிஎம்மில் பணம் நிரப்ப பயன்படுத்தப்படும் வாகனத்தை கைவிட்டு, அதில் இருந்த பணத்தை வேறொரு காருக்கு மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும், அந்த கார் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருப்பதைக் கண்டறிந்த போலீசார், பாகேபள்ளி சோதனை சாவடியில், காரை மடக்கிப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் இருந்த சுமார் 54 லட்சம் ரூபாயையும், கடத்தலுக்குப் பயன்படுத்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்