கோவை சிறை வளாகத்தில், சந்தன மரம் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மத்திய சிறைச் சாலையின் சிறைக் காவலர் சிவராஜன், சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சந்தன மரம் ஒன்று, அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.