சார்ஜ் போட்டபடி Phone பேசிய டீ மாஸ்டர்..திடீரென வெடித்து சிதறியதால் பலியான இளைஞர்..பழைய வண்ணாரப்பேட்டையில் சோகம்
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காமராஜ் என்பார் மெரினாவில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பின்னர், செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால், மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.