BREAKING || தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்

Update: 2023-03-09 12:06 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை.

பெண்களுக்கு ரூ.1000 நிதி உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கு நிதி ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை.

புதிய தொழில்‌ நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தலைமைச்செயலகம், சென்னை/5/தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Tags:    

மேலும் செய்திகள்