BREAKING || ஆவின் நிர்வாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
"கூட்டுறவு சங்கங்களில் பொதுப் பணியாளர்கள் பணிக்கு ஆள் சேர்க்க ஆள்சேர்ப்பு வாரியம் அமைப்பது குறித்து அரசு சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது", ஆவின் நிர்வாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, வெளிப்படைத்தன்மை நமது இந்திய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு என்பதை மறந்துவிட முடியாது- நீதிபதி, நிர்வாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளது- நீதிபதி/நிர்வாகம் சரியாக அமையாவிட்டால், சட்டத்தின் மீது குடிமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்படும்- நீதிபதி