சென்னையில் அண்ணாசாலை, மயிலாப்பூர், சாந்தோம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நகருக்குள் மயிலாப்பூர், அண்ணாசாலை, பாடி, கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட இடங்களிலும் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
இதேபோல் புறநகர் பகுதிகளான போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கன மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.