குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சிக்கிய நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரின் வாக்குமூலம் பதிவு

Update: 2023-01-24 09:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் கழிவு கலந்த விவகாத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதர் கழிவு கலந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இதுவரை, 70 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதையடுத்து, அன்னவாசல் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

வேங்கை வயல் கிராம‌ம் அன்னவாசல் ஒன்றியத்தில் வருவதால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆபரேட்டர் மற்றும் அவரை கண்காணிக்கும் பொறுப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் இருப்பதால் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்