தாயின் அஸ்தியை புதைத்து அதன் மேலே கோயில் கட்டிய மகன்.. கும்பாபிஷேகத்தை பார்த்து அசந்த மக்கள்

Update: 2023-04-25 03:09 GMT

திருச்செந்தூர் அருகே வீர பாண்டியன் பட்டனத்தில், இளைஞர் ஒருவர் தனது தாய்க்கு கோயில் கட்டியது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கல்யாணகுமார் என்பவரின் மனைவி சுப்பு லக்‌ஷ்மி என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால், அட்சய திருதியை அன்று உயிரிழந்துள்ளார். அவரது அஸ்தியை பத்திரப்படுத்திய மகன் ராகவேந்திரா, தன் தாயின் பெயரில் அமைந்துள்ள சுப்பு லக்ஷ்மி கார்டன் பகுதியில் அஸ்தியை புதைத்து அதன் மேல் கோயிலும் கட்டியுள்ளார். தீவிர சிவ பக்தையான தாயின் ஞாபகமாக, கோயிலில் சிவ லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து, தாய் இறந்த அட்சய திருதிய நாளில் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். தாய் மீது கொண்ட பாசத்தால் மகன் கோயில் கட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்