கைமீறி சென்ற நிலைமை.. கல்லூரியில் ரீல்ஸ் எடுத்தால்.. மாணவர்களுக்கு இறுதி எச்சரிக்கை
கோவையில், அரசு உதவி பெ றும் சிபிஎம் கலை கல்லூரி வளாகத்தில் எடுத்த வீடியோக்களை சமூகவலைதளத்தில் இருந்து மாணவர்கள் நீக்காவிட்டால் சட்டரீதியில் நடவடிக்கை எடுகப்படும் என அக்கல்லூரியின் முதல்வர் எச்சரித்துள்ளார். கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பிய முதல்வர், அனுமதியின்றி குறும்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரு வருடங்களுக்கு முன் மாணவர்கள் எடுத்த வீடியோ காவல்துறை வரை சென்றதால் இந்த நடவடிக்கை என கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.