வேலைக்கு வரச்சொல்லி ஓனர் செய்த கொடுமை..வீட்டுக்குள் பூட்டி வைத்து..காது கூசும் அசிங்கமான வார்த்தைகள்

Update: 2024-11-26 16:04 GMT

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என இணையதளம் வழியாக விளம்பரப்படுத்தி இருக்கிறார். இதனைப் பார்த்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கவிதா என்பவர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து

கடந்த ஏழாம் தேதி மாதம் ரூ 19 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வீட்டோடு தங்க வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கவிதாவை சிவக்குமார் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. சிவக்குமார் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் வேலைக்குச் செல்வதால் தினமும் கவிதாவை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி செல்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர்.இந்த நிலையில் கவிதா தனக்குப் பிறந்த நாள் என்றும், தனது மகன் தன்னை பார்க்க வருவதால் வீட்டை பூட்ட வேண்டாம் என கூறி இருக்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு கவிதாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் தகாத வார்த்தைகளால் சிவக்குமார் பேசியதாகக் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்