மார் தட்டி சொன்ன உக்ரைன் அதிபர்.. எழுந்து நின்று கைதட்டிய அமெரிக்கா.. உச்சக்கட்ட வேதனையில் புதின்..!
ஏறக்குறைய அனைத்து நேட்டோ நாடுகளின் ராணுவ வலிமையும் ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்களின் ஆண்டு இறுதிக் கூட்டத்தில் பேசிய புதின், உக்ரைனில் தங்கள் ராணுவப் பிரச்சாரத்தின் அனைத்து இலக்குகளையும் ரஷ்யா நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ரஷ்ய வீரர்கள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களை "ஹீரோக்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனில் நிகழ்ந்த சம்பவங்கள் வருத்தம் தரக் கூடியவை தான் என்று தெரிவித்த புதின், ஆனால் அதற்கு ரஷ்யா காரணம் அல்ல என திட்டவட்டமாக தெரிவித்தார்