செங்கல்பட்டை உலுக்கிய பாமக நிர்வாகி கொலை... தேடப்பட்ட இளைஞர் சரண் | PMK | Chengalpattu
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளராக இருந்து வந்த நாகராஜ், கடந்த 9-ந் தேதி இரவு 7 பேர் கொண்ட கும்பலால், சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அஜய் என்கிற சிவப்பிரகாசம் என்ற இளைஞரை, போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்த நிலையில், கார்த்திக், சூர்யா, விஜி, தினேஷ், மாரி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே தலைமறைவாக இருந்த நத்தம் பகுதியை சேர்ந்த அன்வர் உசேன் என்பவரை, போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து நீதிபதி அகிலா உத்தரவின்பேரில் அன்வர் உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.