அரசு பங்களாவையே அபேஸ் செய்த நபர் - அதிகாரியின் ஆய்வில் சிக்கிய அலுவலர்

Update: 2023-01-09 16:20 GMT

கள்ளக்குறிச்சியில், அரசு பங்களாவை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்த சார் - பதிவாளர் பொறுப்பு வகித்த அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அரசு நிலம், வக்பு வாரியம், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் சட்ட திருத்தத்துக்கு, சார் பதிவாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சார்- பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மாதம், ஒரு சொத்து விற்பனை பதிவானது. பத்திரம் மற்றும் அதன் மதிப்பில் சந்தேகம் வந்ததால், துணை ஆட்சியர் தலைமையில், ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொத்து, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான உதவி ஆட்சியர் பங்களா என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், பத்திரப்பதிவு செய்த, சார் - பதிவாளர் பொறுப்பில் உள்ள கதிரவனை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்