மந்திரவாதி எனக்கூறி பெண்ணிடம் கைவரிசை...விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள் | Pudukottai
மந்திரவாதி எனக்கூறி மோசடியில் ஈடுபட்டவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குடுகுடுப்பை தொழில் செய்துவரும் திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு கொத்தனார் தொழில் செய்து வரும் செல்வம் என்பவரை ஆபத்து வரப்போவதாக மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். மேலும், பொன்னழகி என்பவரிடமும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து என கூறி பரிகாரம் செய்ய பணம் கேட்டு மிரட்டி பணம் பறித்த சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மகாலிங்கத்தை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.