ஜல்லிக்கட்டு வழக்கு கடந்து வந்த பாதை..

Update: 2023-05-19 02:10 GMT

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழலில் ஜல்லிக்கட்டு வழக்கு கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்..

தமிழகத்தின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டு முதலில் 2006-ல் தடையை எதிர்கொண்டது. ரேக்ளா ரேஸ் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது.

2007 விசாரணையில் தடையை அடியோடு ரத்து செய்த உயர்நீதிமன்றம், அறுவடை காலங்களில் நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது.

2007 ஜூலையில் விவகாரம் உச்சநீதிமன்றம் செல்ல, இடைக்கால தடை ஏற்பட்டு போட்டியை நடத்த முடியாது போனது.

2008 ஜனவரியிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது தமிழக அரசின் சீராய்வு மனுவில் நிபந்தனையை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இப்படியாக தடை... வழக்கு... தடைநீக்கத்தை சந்தித்துவர 2011 ஜூலையில் வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையும் சேர்க்கப்பட்டது. இது மறைமுகமாக வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2012 மதுரை, திருச்சி, சிவகங்கையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

2013 ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டது.

2014 பிப்ரவரியில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரப்பட்ட வழக்கில் அவ்வாண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து

2015-ல் தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், 2016-ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மெரினா உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு 2017 ஜனவரி 21 ஆம் தேதி நிறைவேற்றியது. அவசர சட்டம் சட்டமாக்கப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதற்கு எதிராகவும் பீட்டா, விலங்குகள் நிலவாரியம் தரப்பில் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

2018 பிப்ரவரியில் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றியது.

தொடர்ந்து விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது, இனி நீதிமன்றம் தலையிடாது என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்