தமிழ் யூடியூப் பிரபலங்களின் மறுபக்கம்.. "லைக் போட்டால் மானம் பறிக்கப்படும்".. 5 பிரபலங்கள் ஆடிய அந்தரங்க ஆட்டம்

Update: 2023-05-16 04:54 GMT

வீட்டில் ஸ்பை கேமரா வைத்து, அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, youtube நடத்தும் நபர்கள், பணம் கேட்டு மிரட்டுவதாக பெண்கள் 3 பேர் புகார் அளித்துள்ள சம்பவத்தின்​ பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

திருச்சியை சேர்ந்த கவிதா, சென்னையை சேர்ந்த மும்தாஜ் மற்றும் புதுச்சேரியில் வசித்து வரும் சித்ரா ஆகிய 3 பெண்கள், கோவையில் கூட்டாக சேர்ந்து பேட்டியளித்தனர். youtube-ல் பயணித்த இந்த மூவரும், youtube நடத்துபவர்களால் பாதிக்கப்பட்டு, தாங்கள் சந்தித்த இன்னல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

youtube-ல் போட்ட வீடியோக்களுக்கு தொடர்ந்து லைக் போட்டு வந்ததால், நல்லவர்கள் போல பழகிய youtube சேனல் நடத்துபவர்கள், தங்களுக்கே தெரியாமல் வீட்டில் ஸ்பை கேமரா வைத்து வேவு பார்த்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வருவதாக, 3 பெண்களும் கூறியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேட்ட பணம் தரவில்லை எனில், தங்களிடம் இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் ஒவ்வொன்றும், ரிலீஸ் செய்யப்படும் என மிரட்டல் விடுத்து வரும், தமிழன் யூகே என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் சிங்கள தமிழர் செந்தில்குமார் ராஜா - சென்னையை சேர்ந்த மாயவன் எனும் youtube சேனல் நடத்தும் வினோத் வின்சென்ட் ராஜ் - சுசிமா என்ற பெயரில் யூடியூப் நடத்தும் சூசைமேரி - லைஃப் இன் மை வே என்ற பெயரில் யூடியூப் நடத்தும் ஜாய் சில்வியா மற்றும் பாஸ்கர் குமார், வள்ளி உள்ளிட்டோர் மீது முறையே, திருச்சி மற்றும் புதுச்சேரி காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்