ரூ.100 மட்டும் லஞ்சம் வாங்கிய அதிகாரி... 32 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை
ராம் நாராணயன் வர்மா என்ற 82 வயதான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்...
கடந்த 1991 ஆம் ஆண்டு ராம் குமார் திவாரி என்பவரிடம் நூறு ரூபாயை லட்சமாக பெற்றுள்ளார்.
இது தொடர்பான வழக்கில் இரண்டு நாள் சிறையில் இருந்த வர்மா, அதன் பிறகு ஜாமின் வெளி வந்துவிட்டார்.
தற்போது மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து, நூறு ரூபாய் லட்சம் பெற்ற காரணத்தினால் வர்மாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது, லக்னோ சிறப்பு நீதிமன்றம்.
வர்மாவிற்கு தற்போது 82 வயது என்பதால், தண்டனையை குறைக்குமாறு அவரது தரப்பில் கேட்டு கொள்ளப்பட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்துவிட்டனர், நீதிபதிகள். வயது மூப்பை காரணம் காட்டி தண்டனையை குறைத்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று அவர்கள் உத்தரவு பிறப்பித்துவிட்டனர்.