மாலை கழுத்துடன் புது மாப்பிள்ளை கைது.. டைமிங் மிஸ் ஆனதால் கழுத்தில் ஏறிய தாலி - மறுவீடு 'மாமியார்' வீடானது.. 'களி' விருந்தானது..!

Update: 2023-05-26 03:43 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன்...31 வயதான இவரும் எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரும் கடந்த 10 வருசமா காதலிச்சு வந்ததுல, ரம்யா கர்ப்பமடைஞ்சுருக்காங்க...கர்பத்தை கலைச்சா உன்னை திருமணம் செஞ்சுக்குறேன்னு சுப்ரமணி சொன்னத நம்பிய ரம்யா, கர்ப்பத்தை கலைச்ச நிலையில, அலைபாயுத பட பாணில ரெண்டு பேரும் மறைமுகமா திருமணம் செஞ்சுருக்காங்க...இந்த நிலையில், கடலூரை சேர்ந்த வேறொரு பெண்ணோட சுப்ரமணிக்கு அவங்க வீட்டுல திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயம் செய்யப்பட்டிருக்கு..திருமண வேலைகளெல்லாம் தடபுடலா போய்ட்டு இருந்த நிலையில, இதெல்லாத்தையும் தெரிஞ்சு ஷாக்கான ரம்யா, சுப்ரமணியோட தான் ஒண்ணா இருக்கும் போட்டோஸ எல்லாம் எடுத்துட்டு சுப்ரமணி வீட்டுக்கு கிளம்பிருக்காங்க...

காதலனோட வீட்டு முன்னாடி உக்காந்து ரம்யா விடிய விடிய போராட்டம் நடத்துனதுல அந்த பகுதியே பரபரப்பாகி போக, போலீசாருக்கு தகவல் பறந்துருக்கு....சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரம்யாவோடு செல்போன வாங்கி விசாரணை செஞ்சதுல, ரம்யாவை சுப்ரமணி திருமணம் செஞ்சதும், ஏமாத்துனதும் தெரியவர, உடனடியா இப்ப நடக்கப் போற திருமணத்தை தடுத்து நிறுத்தனும்னு காதலியும் போலீசாரும் காரில் பறந்துருக்காங்க...

அன்னைக்கு வேற முகூர்த்த நாளாகி போக, கடலூர், திருவந்திபுரம் கோயிலில்ல ஏகப்பட்ட கல்யாணம் நடந்துருக்கு... அந்த கூட்டத்துக்கு மத்தியில சுப்ரமணியை போலீசார் தேடி கண்டுபிடுக்குறதுக்குள்ள, அவர் கல்யாணமே முடிஞ்சு மணக்கோலத்துல கோயிலுக்கு வெளியே வந்துருக்காரு...இத பார்த்து ரம்யா மனசுடைஞ்சு நிற்க, மனக்கோலத்தில் இருந்த புதுமாப்பிள்ளைய மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போறதுக்கு பதிலா போலீசார் காவல்நிலையம் அழைச்சுட்டு போய் விசாரணை நடத்திட்டு வர்றாங்க...சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்டாக ரெண்டு பெண்களும் தங்களோட வாழ்க்கையை பறிகொடுத்த நிலையில, கோயில் வாசல்ல நின்னது எல்லாரையும் சோகத்துல மூழ்கடிச்சது...

Tags:    

மேலும் செய்திகள்