75 அடி ஆழத்தில் பறந்த தேசியக்கொடி... ஆழ்கடல் பயிற்சியாளரின் நெகிழ்ச்சி செயல்...

Update: 2022-08-13 03:45 GMT

சுதந்திர தினத்தை ஒட்டி பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி.

ஆழ்கடல் பயிற்சியாளரின் செயலால் நெகிழ்ச்சி.

சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆழ்கடலில் தேசியக்கொடியை பறக்கவிட்டு ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் அசத்தியுள்ளார். சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த், கடலுக்குள் திருமணம் செய்து வைப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட வித்யாசமான நிகழ்வுகளை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி வெட்டுவாங்கேணி கடல் பகுதியில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டு அரவிந்த் அசத்தியுள்ளார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்