மென்பொறியாளரை உயிருடன் காரில் வைத்து எரித்த மர்மகும்பல்... தீவிர விசாரணையில் போலீசார்

Update: 2023-04-02 14:12 GMT

திருப்பதி அருகே, மென்பொறியாளரை உயிருடன் காரில் வைத்து மர்ம கும்பல் எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி அருகே பொப்புராஜப்பள்ளி கிராமத்தில், நள்ளிரவு நேரத்தில், மர்ம நபர்கள் கார் ஒன்றின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு படையினருடன் போலீசார் விரைந்து தண்ணீரை பீச்சி அடித்து, தீயை கட்டுப்படுத்தினர். பின்னர், காரை சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் உயிருடன் எரிந்து இறந்து கிடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கார் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கப்பட்ட நபர் வெதுருகுப்பம் மண்டலத்தை சேர்ந்த மென் பொறியாளர் நாகராஜு என தெரியவந்தது. நாகராஜுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரை உயிரோடு எரித்துக் கொலை செய்தவர்கள் யார்? அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்