சென்னையில் மிக மிக பிரபல நகைக்கடை ஓனர்கள் கைது.. பூட்டை உடைத்து தூக்கி சென்ற அதிகாரிகள்
சென்னை நொளம்பூரில் உள்ள ஏஆர்டி ஜூவல்லரி நிறுவனத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதால் பரபரப்பு நிலவியது
பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி, நொளம்பூரில் உள்ள ஏஆர்டி ஜூவல்லரி நிறுவனம் பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தததாக புகார் எழுந்தது. அதன் பேரில், உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகிய சகோதரர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதனையடுத்து நொளம்பூரில் உள்ள அந்த மாலின் பூட்டை உடைத்து , சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர் தகவல் அறிந்து முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள், அதிக அளவில் அங்கு குவிந்ததால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்