மருத்துவமனை தொட்டியை வெறும் கையால் சுத்தம் செய்த அமைச்சர்

Update: 2022-12-07 11:17 GMT

பழங்காநத்தம் மாப்பாளையத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைச்சர் சிவி கணேசன் ஆய்வுகளை மேற்கொண்டு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 60 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த இஎஸ்ஐ மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும், கோரிக்கைகளின்படி போதுமான பணியாளர்கள் நிரப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் தேவைக்கு அதிகமாக மருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குபவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்தார். நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக ஆய்வின் போது மருத்துவமனையில் கைகழுவும் தொட்டி அசுத்தமாக இருந்த நிலையில், அதை தனது கைகளால் தானே அமைச்சர் சிவி கணேசன் சுத்தப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்