10 நிமிடங்களில் 12 குளிர்பானங்களைக் குடித்த நபர்..! வரிசையாக உடல் உறுப்புகள் செயலிழப்பு...

Update: 2022-11-20 11:01 GMT

பத்தே நிமிடங்களில் 12 குளிர்பானங்களைக் குடித்து காலி செய்த நபர் உறுப்புகள் செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது.

36 வயதான gamer ஒருவர் விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்துள்ளது. 12 குளிர்பானங்களைக் குடித்ததால் அவரது கணையம், சிறுநீரகங்கள் செயலிழக்கத் துவங்கியது.

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவர் நலம் அடைந்தார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிலையில், இது சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்