இந்தியாவே எதிர்பார்க்கும் முக்கிய திட்டம்.. இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்

Update: 2023-05-22 06:11 GMT

சந்திரயான் 3 ராக்கெட் ஜூலை 12ஆம் தேதி விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்ணில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து 2008ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 திட்டம் வெற்றி பெற்றது. 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2 ராக்கெட்டை இஸ்ரோ அனுப்பிய நிலையில், நிலவில் தரையிறங்குவதில் மட்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே, சந்திரயான் 3ஐ விண்ணில் செலுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட் மூலம் ஜூலை 12ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நிலவின் நில அதிர்வு, அங்குள்ள பிளாஸ்மா சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்