கழுத்தில் கத்தி வைத்து... கருவை கலைத்த காதலன்..! கயவனிடம் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் இளம் பெண்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய காதலன் மீது, காதலி பரபரப்பு புகாரை அளித்து உள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம் பெண், வண்ணாரபேட்டையை சேர்ந்த இம்ரான் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இம்ரான் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், இருவரும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதனால் கர்ப்பமான இளம் பெண்ணிடம், கருவை கலைக்க விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ மூலமாக இம்ரான் மிரட்டல் விடுத்துள்ளார்.