மூதாட்டி வீட்டுக்கே நேரே வந்த ஜட்ஜ்.. அடுத்தடுத்து உத்தரவு.. அலறிய அதிகாரிகள்
பந்தலூர் அருகே, முதியோர் உதவித்தொகை கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்ட பழங்குடியின மூதாட்டியை நேரில் சந்தித்து, உதவித்தொகை வழங்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். எருமாடு மூப்பங்குன்னு பகுதியை சேர்ந்த சுண்டா என்ற 90 வயதான மூதாட்டி, உதவித்தொகை கோரி பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என, தெரிகிறது. இதையறிந்த நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல்காதர், மூதாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும், வீடு, ரேஷன் கார்டு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, மூதாட்டி சுண்டாவுக்கு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் தங்கள் வாகனத்திலேயே அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.