ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளிக்கு கிடைத்த ஜாக்பாட் | Australia | Mayor | Inidan origin
ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சிட்னியின் புறநகர் பகுதியான பரமட்டா நகரின் மேயராக இருந்த டேவிஸ் மாகாண உறுப்பினரான நிலையில், மேயர் பதவியை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டார். பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சமீர் பாண்டே 1995-ல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர். அரசியலிலும் ஆர்வம் கொண்ட சமீர் பாண்டே 2017-ல் பரமட்டா நகரின் வார்டு உறுப்பினரானவர், 2022-ல் நகரின் துணை மேயரானார். இப்போது நகரின் மேயராகியிருக்கும் சமீர் பாண்டே, ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து நகரின் மாநகராட்சிக்கு தலைமை தாங்குவது தனக்கு பாக்கியம் எனக் கூறியிருக்கிறார்.