பல்லை பிடுங்கிய விவகாரம்.. குழந்தைக்கும் இது போன்று நடந்ததா..?தாய் சொன்ன பகீர் தகவல்
அம்பாசமுத்திரத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் தனது குழந்தையும் பாதிக்கப்பட்டிருப்பதாக தாய் ஒருவர் பேட்டி அளித்தார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், இந்த விவகாரத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தால், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குபதிவு செய்யும் எனவும், குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.