இந்திய மருந்தால் உஸ்பெகிஸ்தானில் சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்- நடவடிக்கை எடுக்க வேண்டும்/பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

Update: 2022-12-29 11:02 GMT

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தால் சிறுவர்கள் உயிரிழந்து தொடர்பாக கடும் எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ், இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் ஆபத்தானவையாக பார்க்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். முதலில் காம்பியாவில் 70 சிறுவர்களும், தற்போது உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்வதாக பெருமை பேசுவதை மோடி அரசு நிறுத்த வேண்டும் என்ற ஜெய்ராம் ரமேஷ், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்