சென்னை கோயம்பேட்டில் தலை துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில், வாகன நிறுத்தும் இடத்தை ஒட்டிய சீனிவாசா நகர் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
அதன்படி, கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் எலும்புக் கூடாக ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சற்று தூரத்தில் தலை தனியாக கிடந்துள்ளது.
இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்றும், அவர் இறந்து 20 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
இறந்தவர் யார் என்பதைக் கண்டறிய அந்தப் பகுதி முழுவதும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் இருத்து தடயங்களை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.