தள்ளு வண்டியில் நூடுல்ஸ், பாணி பூரி..."உன் கையில நல்லா இருக்கும்னு தான இங்க வராங்க"

Update: 2024-11-26 07:20 GMT

தாராபுரத்தில், 25 உணவகங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். பிரியாணி கடைகள், ஃபாஸ்ட் புட், பானி பூரி கடைகள் என 25 கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். சில கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன இறைச்சிகள், அழுகிய பழங்கள், காலாவதியான உணவுப்பொருட்களை கைப்பற்றி, பினாயில் ஊற்றி அழித்தனர். தள்ளு வண்டியில் வைத்திருந்த நூடுல்ஸ், பாணி பூரி, ரைஸ், பழைய என்னை ஆகியவற்றையும் கைப்பற்றினர். கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த‌ அதிகாரிகள், இதுபோன்று நடக்க‌க்கூடாது என்றும், தொடர்ந்து திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்