"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" - சிறுவர்களை காண வெள்ளத்தில் வளர்ப்பு நாய் செய்த சம்பவம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர திட்டு கிராமங்களுக்கு 5வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்த நிலையில், நாதல படுகை கிராமத்தில் வசித்த சிறுவர்களான பூபதி, தனுஷின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்ததால் இருவரும் தங்கள் குடும்பத்துடன் நிவாரண முகாமில் தங்கியுள்ளனர்.
ஆனால் அவர்கள் வளர்த்து வந்த நாய் வெள்ளத்தில் எங்கே சென்றது என தெரியாமல் இருவரும் கலங்கி நின்ற நிலையில், ஒரு ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்தது.
தனது உரிமையாளர்களைக் காணாமல் தவிதவித்துப் போன அந்த நாய், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வெள்ளத்தில் நீந்து வந்து நிவாரண முகாமை அடைந்தது...
கரை சேர்ந்த நாய் குட்டியைக் கண்டு ஆனந்தம் அடைந்த சிறுவர்கள் அதற்கு உணவளித்து மகிழ்ந்தது நெகிழச் செய்தது...
அன்பு என்ற மந்திரம் நமக்கு அசாத்தியமான தைரியத்தைக் கொடுக்கும் என்பது இந்த சிறுவர்களுக்கும் நாய்க்கும் இடையேயான பாசப் போராட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ளது...