பாலியல் உறவில் விபரீதம் செய்த கணவன்..கட்டையால் அடித்து கொன்ற மனைவி - ஓசூரில் கொடூரம்

Update: 2023-05-19 08:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கடந்த மார்ச் மாதம் எரிந்த நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் எரிக்கப்பட்டவர் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பதும், அவரின் மனைவி லட்சுமி என்பவர், பிரகாஷை கொன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், பிரகாஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததால் தூங்கும்போது கட்டையால் அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். பின்பு லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகியோர், பிரகாஷின் உடலை சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லட்சுமி, சின்னராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்