சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே மூண்ட உள்நாட்டு போர் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலான தாக்குதலில், 528 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமானோர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, சூடான் நகரங்களை ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், கார்ட்டூம் நகரப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.