இந்தியாவையும் உளவு பார்த்த சீன பலூன்?... வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்

Update: 2023-02-09 10:25 GMT

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மேல் சீன உளவு பலூன் ஒன்று பறந்த நிலையில், அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது...

அட்லாண்டிக் கடலில் விழுந்த பலூனின் பாகங்களை ராணுவ வீரர்கள் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அது உளவு பலூன் அல்ல என்றும், வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட ஆகாய கப்பல் வகைதான் எனவும் சீனா தெரிவித்திருந்த நிலையில், அது சுட்டு வீழ்த்தப்பட்டதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது.

இதனிடையே அமெரிக்கா மட்டுமல்லாது சீன விமானப் படையால் இயக்கப்படும் இந்த உளவு பலூன்களானது இதுவரை 5 கண்டங்களைக் கடந்துள்ளதாகவும், இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளை உளவு பார்த்துள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்