மஞ்சு விரட்டில் பரிசுகளை குவித்த காளை... வயது முதிர்வால் உயிரிழந்த சோகம் - கும்மியடித்து கிராம மக்கள் அஞ்சலி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வயது முதிர்வு காரணமாக இறந்த காளை மாட்டிற்கு, கிராம மக்கள் கும்மியடித்து அஞ்சலி செலுத்தினர்.
சூரக்குடி படைத்தலைவி நாயகி அம்மன் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த அந்த காளை மாடு, பல்வேறு மஞ்சு விரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், வயது முதிர்வால் இந்த காளை மாடு இறந்ததையடுத்து, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, மேளதாளங்கள் முழங்கவும், கும்மியடித்தும் மாட்டிற்கு அஞ்சலி செலுத்தினர்.