எதற்காக இறந்தோம் என தெரியாமலேயே இறந்துபோன சிறுவனின் உடல் நல்லடக்கம் - கலங்கவைத்த துயரம்..!
காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், மாணவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது. சக மாணவனின் தாயார் கொடுத்த குளிர்பானத்தை குடித்து உயிரிழந்த சிறுவனின் உடல் கூர் ஆய்வை, வீடியோ பதிவுடன் ஜிப்மர் மருத்துவ குழு முடித்துள்ளது. இதையடுத்து, சிறுவனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவனின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், காரைக்கால் முல்லை நகர் பகுதியில் மாணவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது.