ஆகாயத்தில் போதை ஆசாமி செய்த அட்டூழியம்... சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 318 பயணிகளுடன் சென்ற விமானத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த மெல்னிக் யூரி, பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் பறந்தபோது மெல்னிக் யூரி, போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். உடனே விமான பணிப்பெண்கள்,
போதை பயனியை அமைதிபடுத்த முயன்றனர். விமானி, போதை பயணிக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார். ஆனாலும் பயணி தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. போதை விமானியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து வேறொரு விமானத்தில் அந்த பயணி, சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.