விமரிசையாக நடைப்பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா - வாணவேடிக்கையுடன் உற்சாக கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரு சக்கர வாகன பேரணியுடன் தண்டு மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. ஆண்டுதோறும் இக்கோவிலில் குண்டம் மற்றும் கம்பம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி, நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரியுடன் கடம்பூர் மலை பகுதிக்கு சென்ற அப்பகுதியினர், அங்குள்ள ஆலமரத்தை வெட்டி எடுத்து லாரியில் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது, வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.