120 ஆண்டுகள்.. நான்கு தலைமுறையாக காவடி எடுக்கும் பக்தர்கள்..களைகட்டும் தைப்பூச திருவிழா

Update: 2023-02-05 10:57 GMT

தைப்பூசத் திருநாளான இன்று திரளான பக்தர்கள் பழனி முருகனை தரிசித்து வருகின்றனர்.

தைப்பூசத் திருவிழா பழனி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தைப்பூச திருநாளின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று முத்துக் குமார சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. மலைக்கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோயில் முன்பு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். பாதயாத்திரை வந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Tags:    

மேலும் செய்திகள்