பிரபல பார்டர் பரோட்டா கடையில்.. 150 கிலோ கெட்டுப்போன இறைச்சி - அதிர்ந்த வாடிக்கையாளர்கள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இயங்கி வரும் பிரபல பார்டர் பரோட்டா கடையில் 150 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தார்.
செங்கோட்டை பார்டர் பரோட்டா கடையில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றுள்ளன. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர், பார்டர் பரோட்டா கடையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஒரு குடோனுக்கு சாவி இல்லை என் கூறப்பட்டதால் அதற்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் சாவி எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து சீல் அகற்றப்பட்டு, குடோனை அலுவலர் பார்வையிட்டார்.
அங்கு சமைக்கப்படும் உணவு தரத்தை ருசித்து பார்த்த அலுவலர், குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தார்.