"ATM கார்டு மேல இருக்க நம்பர் சொல்லுங்க.."..OTP சொன்னதும் மொத்த பணமும் காலி..'பரிதாபங்கள்' பாணியில் அரங்கேறிய செயல் - மக்களே உஷார்..!
சென்னை புத்தகரம் பகுதியை சேர்ந்த சங்கீதா, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவரை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்மநபர், தான் தனியார் வங்கியின் மேலாளர் எனவும், உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாக உள்ளதாகவும் கூறி, ஏடிஎம் கார்டு தொடர்பான விவரங்களை பெற்றுள்ளார். மேலும் சங்கீதாவின் செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபிக்களையும் பெற்றுள்ளார். இதன்பின்னர் சங்கீதாவின் வங்கி கணக்கிலிருந்து 19 ஆயிரத்து 998 ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.