ஜஸ்ட் மிஸ்-ல் உலகக்கோப்பை ஆடும் வாய்ப்பை தவறவிட்ட அணி - மனம் உடைந்த ரசிகர்கள்

Update: 2023-07-05 02:57 GMT

50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் பிரிவில், ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. புலவாயோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே 203 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை ஜிம்பாப்வே இழந்தது. இதையட்டுத்து ஸ்காட்லாந்து அல்லது நெதர்லாந்து அணிகளில் ஏதேனும் ஒரு அணி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்