சிதம்பரம் அருகே தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக பள்ளி மாணவனை ஆசிரியை தாக்கிய விவகாரத்தில், ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே கூடுவெளிசாவடி கிராமத்தில் அரசு தொடக்கநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை, பள்ளியின் ஆசிரியை கண்ணகி என்பவர் சரமாரியாக திட்டி தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.