கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில், மிதமான மழை பெய்தது. உக்கடம், காந்திபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம், அதன் சுற்றுப்புறங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. புதுப்பட்டி, வடுகப்பட்டி, ஜெயமங்கலம், லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மாலை வேளையில் மிதமான மழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இரவிலும் தொடர்ந்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மாங்குடி, சேந்தமங்கலம் மற்றும் குளிக்கரை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.