"உன் கூடவே என்னையும் கூட்டிட்டு போ ப்பா.." தந்தை உடலை பார்த்து தலையில் அடித்து கதறிய தூத்துக்குடி VAO மகன்
தூத்துக்குடி மாவட்டத்தில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முறப்பாடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி கிராமத்தில் விஏஓ-வாக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் பணியிலிருந்த போது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸின் உடல், நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உடலை பெற்றுக்கொண்ட அவரது உறவினர்கள் விஏஓ-வின் சொந்த ஊரில் உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்...