திமுக முன்னாள் எம்பி மரணத்தில் சந்தேகம்.. ரகசிய இடத்தில் 5 பேரிடம் விசாரணை
முன்னாள் எம்பி உயிரிழப்பு - 5-பேரிடம் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவை சேர்ந்த மஸ்தான் என்பவர் கடந்த 22-ம் தேதி தனது காரில் திருச்சி நோக்கி சென்ற போது கூடுவாஞ்சேரி அருகே உயிரிழந்தார்.
இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட 5-பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
முன்னாள் எம்.பி. மஸ்தான் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது