மீளாத் துயரில் கங்குவா படக்குழு - துரத்தும் சோகம்

Update: 2024-10-31 00:12 GMT
  • ரிலீஸ் தேதியை நெருங்கி வரும் கங்குவா திரைப்படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்கள் அணிவகுத்து வர, படத் தொகுப்பாளரின் திடீர் மரணம், படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணி என்ன ? பார்க்கலாம் விரிவாக..
  • சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள பெரிய பட்ஜெட் படம் தான் கங்குவா...
  • இரு காலக்கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் இக்கால இளைஞராகவும், கங்குவா என்ற கதாபாத்திரத்தில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த ஒருவராகவும் சூர்யா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
  • அண்மையில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்த சூழலில், அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வந்தது கங்குவா திரைப்படம்...
  • ஆம், அக்டோபர் 10 ம் தேதி படத்தை வெளியிட படக்குழு தயாரான நிலையில், வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாவதால், சிக்கல் ஏற்பட்டது..
  • கங்குவா வெர்சஸ் வேட்டையன் என ரசிகர்கள் ஆட்டத்தை தொடங்க, பெரியவர்களுக்கு வழி விடுவதாக கூறி போட்டியில் இருந்து கங்குவா திரைப்படம் விலகியது.. இது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், 14ம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவித்தது படக்குழு...
  • இந்நிலையில் படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தார். விடாமுயற்சி படத்தின் பணிகளுக்காக அஜர்பைஜான் சென்றிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
  • இந்த துயரச் செய்தியால் துவண்டிருந்த படக்குழு, அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டியது.. இதனையடுத்து இசை வெளியீட்டு விழா, ப்ரமோஷன் பணிகள் என படக்குழு பிசியாக இருக்க, திடீரென வெளியானது அதிர்ச்சி செய்தி..
  • கங்குவா படத்தின் படத் தொகுப்பாளரான நிஷாத் யூசூப் உயிரிழந்தார். 43 வயதான நிஷாத் யூசூப், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கொச்சியில் பனம்பள்ளி நகரில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிஷாத் யூசூப்பின் உடல் மீட்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இப்படி சிக்கல்களையும், துயரங்களையும் கடந்து நவம்பர் 14ம் தேதி ரிலீசாகிறது கங்குவா திரைப்படம்,

Tags:    

மேலும் செய்திகள்