சூரியனின் ஒரு பகுதி உடைந்து விழும் காட்சி.. படம்பிடித்த நாசாவுக்கு தொற்றிய பயம் - பூமிக்கு ஏதும் ஆபத்தா?

Update: 2023-02-11 08:17 GMT
  • சூரியனின் ஒரு பகுதி உடைந்து அதன் மீதே விழும் காட்சியை பதிவு செய்த நாசா, பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
  • மர்மங்களை கொண்ட சூரியனை நெருங்க முடியவில்லை என்றாலும், அதன் மேற்பரப்பு, சூரிய புயல் குறித்து ஆய்வு நாசா உட்பட உலக நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • இந்த நிலையின் சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு பெரிய துண்டு உடைந்து அதன் வட துருவப் பகுதியில் விழும் காட்சியை நாசாவின் டெலஸ்கோப் படம் பிடித்துள்ளது.
  • சூரியன் உடைந்து விழும் காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது.
  • பெரும்பாலும், சூரிய புயல்கள் மட்டுமே ஏற்பட்டு வந்த நிலையில், அதன் ஒரு பகுதி உடைந்து விழுவதை கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
  • சூரியனின் இந்த நிலை பூமிக்கு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்