திடீரென பூமி மீது மிகப்பெரிய பள்ளம்...குழம்பிய புவியியல் வல்லுநர்கள்...காரணம் என்ன? தொடரும் ஆய்வு
திடீரென பூமி மீது மிகப்பெரிய பள்ளம்...குழம்பிய புவியியல் வல்லுநர்கள்...காரணம் என்ன? தொடரும் ஆய்வு
தென் அமெரிக்க நாடான சிலியில் 25 மீட்டர் அகலத்திற்கு உருவான மிகப்பெரிய பள்ளம் குறித்து புவியியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டைரா அமரில்லா பகுதியில், காப்பர் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
200 மீட்டர் ஆழம் வரை பள்ளம் உருவாகியுள்ளது.
அதன் அடியில் தண்ணீர் மட்டுமே தென்படும் நிலையில், வேறு என்ன இருக்கிறது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.